இந்தியா

ராகுல் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய ஸ்டாலின்!.. நடந்தது என்ன?

தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நெருங்கும் நிலையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.. ஆனால் திமுக மறுத்துவிட்டது.

மேலும் காங்கிரசுக்கு 40 தொகுதிகள் கொடுக்க வேண்டும், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்டு சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் ராகுல் கேட்டார். ஆனால் அது அனைத்தையும் முடியாது என சொல்லிவிட்டது திமுக.

அதோடு தற்போது 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி கொடுத்து காங்கிரசை தனது கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது திமுக.. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என சொன்ன தவெகவிடம் 74 சீட்களை வாங்கி அக்கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பபே ராகுலின் விருப்பமாக இருந்திருக்கிறது.. இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் சோனியா காந்தியிடம் நேரடியாக பேசி காங்கிரசை வழிக்கு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.. அதுவும் 28 தொகுதிகளை கொடுத்து காங்கிரசை உள்ளே கொண்டு வந்து விட்டார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக முடிந்ததற்கு பா.சிதம்பரம், செல்வபெருந்தகை, மல்லிகார்ஜுனா கார்கே ஆகிய மூவரும்தான் முக்கியமான காரணம் என்கிறார்கள்.. அவர்கள் மூவரும் நேரடியாக சோனியா காந்தியிடம் தெரிவித்து கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகியிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை தன் கையை மீறி செல்வதை புரிந்து கொண்ட ராகுல் காந்தி ஒருகட்டத்தில் மொத்தமாக ஒதுங்கிக் கொண்டாராம்.

மேலும் அதிகாரத்தில் பங்கு இல்லை.. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை.. உள்ளாட்சியில் பங்கு இல்லை.. தான் விருப்பப்பட்ட மீனாட்சி நடராஜனுக்கு ராஜ்ய சபா எம்பி சீட் கொடுக்க முடியவில்லை என்பதால் ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்