இந்தியா கடந்த பல வருடங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. ஏனெனில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார். அதன் பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அது இந்தியா மீதான வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதோடு இனிமேல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது எனவும் டொனால்ட் டிரம்ப கூறினார்.. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் கச்சா எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே 30 நாட்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அனுமதி கொடுத்தது. இந்தியாவுக்கு அமெரிக்கா என்ன அனுமதி கொடுப்பது?. பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?.. என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. இதுவரை இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கிறது. போர் மூலமாக ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்தி எரிசக்தி மூலம் வருவாய் ஈட்ட ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

