ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது.. இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வணிக சிலிண்டரை பயன்படுத்தும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரில் இன்று ஹோட்டல்கள் மூடப்பட்டது. அதேபோல், மதுரை, கோவை, போன்ற மாவட்டங்களில் மூன்று நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
அதேபோல், சென்னை, புதுச்சேரியில் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அங்கு ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதிலும், பெரும்பாலானவர்கள் கையேந்தி பவனில் சாப்பிடுபவர்கள். ஓரளவுக்கு சம்பாதிப்பவர்கள் மட்டுமே ஹோட்டலில் சாப்பிடுபவர்கள்.
ஹோட்டல்கள் மூடப்பட்டால் அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்ட வாய்ப்பிருக்கிறது. இப்போள்ள நிலை நீடித்தால் சென்னை, புதுச்சேரி, மதுரை, கோவை உள்ளிட்ட பல ஊர்களிலும் நாளை முதல் ஹோட்டல்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கும் விடுதிகள் மற்றும் ஹாஸ்டல்களில் டீ, காபி வினியோகம் இருக்காது என தங்கும் விடுதிகள் நல சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும், சப்பாத்தி, தோசை வழங்கப்படாது எனவும், சம்பார், குருமாவுக்கு பதில் சட்னி மட்டுமே கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, சைட் டிஷ்ஷுக்கு பதில் வாரத்திற்கு 3 நாட்கள் பப்ஸ் மற்றும் முட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

