வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க கடற்படை ஒரு எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி அழைத்து சென்றதாக எழுந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட், தனது சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க கடற்படை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த கப்பலை பாதுகாப்பாக கடக்க உதவியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில நேரங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஈரான் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளது. “அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு அளித்து அழைத்து சென்றது என்பது ஒரு முழுமையான பொய்” என்று ஈரானிய செய்தித் தொடர்பாளர் அலிமுகமது நைனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் எந்தவொரு நடமாட்டமும் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முன்னுக்கு பின் முரணான தகவல்கள் சர்வதேச அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளன.

