இந்தியா

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது?

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம், நேற்று உலகம் முழுவதும் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலியை அணுக முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

டவுன்டெக்டார் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 10,725 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 252 பயனர்களும், பிரிட்டனில் 135 பயனர்களும் இப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் செயலியை பயன்படுத்துவதில் 77 சதவீத பயனர்களும், இணையதளத்தை பயன்படுத்துவதில் 13 சதவீத பயனர்களும் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் தளம் கடந்த சில மாதங்களாக சீராக இயங்கி வந்த நிலையில், இந்த திடீர் முடக்கம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கமோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்