உலகத்தில் உள்ள பணக்கார நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் வல்லரசு நாடாகவும் இருக்கிறது.. உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பல நிதிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது..அதேபோல் நாட்டில் முக்கிய பிரச்சினைகள் ஏற்படும் போதும், இரண்டு நாடுகள் இடையே போர்கள் மூலம் போதும் அமெரிக்காதான் பஞ்சாயத்து செய்து பிரச்சினையை தீர்த்து வைக்கிறது.
ஒருபக்கம் தனக்கு பிடிக்காத செயலை ஒரு நாடு செய்யும்போது அந்த நாட்டின் மீது போர் தொடுப்பது, அந்த நாட்டின் அதிபரை கைது செய்வது என்பது போன்ற அடாவடி வேலையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு வெனிசுலா அதிபரை செய்து சிறையில் அடைத்தார். அதேபோல் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என சொல்லி ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க அமெரிக்க பெண்டகன் அதிகாரிகள் ஒரு பெரிய சம்பவத்தை செய்திருக்கிறார்கள்.
அதாவது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 63 கோடி ரூபாய்க்கு விலை உயர்ந்த இறால்களை வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு ஒரு மாதத்தில் சுமார் 8 லட்சத்து 54,000 கோடி அமெரிக்க பாதுகாப்பு துறை செலவு செய்திருக்கிறது.

