விளையாட்டு

பும்ராவுக்கு பந்து வீச நான் தான் சொல்லி கொடுத்தேன்.. பாகிஸ்தான் பூர்வீக பந்துவீச்சாளர் கூறிய தகவல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு, அவரது புகழ்பெற்ற ‘ஸ்லோயர் பால்’ வீசும் வித்தையை நான் தான் கற்றுகொடுத்தேன் என ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர் ஜகூர் கான் கூறி அதிரவைத்துள்ளார்.

பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஜகூர் கான், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பவுலராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியில் நடந்த ஒரு போட்டியின் போது, மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை கொடுத்த நிலையில், ஜகூர் கானின் பந்துவீச்சு நுட்பத்தை பார்த்து பும்ரா வியந்ததாக கூறப்படுகிறது. பந்துவீச்சு வேகத்தை குறைக்காமல், அதே ஆக்‌ஷனில் எப்படி மெதுவான பந்துகளை வீசுவது என்பதை பும்ரா தன்னிடம் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டதாக ஜகூர் கான் விளக்கியுள்ளார்.

ஷேன் பாண்ட் மற்றும் மஹேல ஜெயவர்த்தனே போன்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் இந்த பயிற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த ஒரு பந்துவீச்சாளர், தன்னிடம் வந்து வித்தையை கற்றுக் கொண்டது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜகூர் கான் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்