சினிமா

66 வயது பிரபல நடிகை கர்ப்பமா? நகைச்சுவையாக அந்த நடிகை கொடுத்த விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு தற்போது 66 வயதாகும் நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு தனது பாணியில் நகைச்சுவையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நடிகர் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த புடவை, அவரை சற்று பருமனாக காட்டியதால் இந்த வதந்தி கிளம்பியது.

இதற்கு பதிலளித்த அவர், “நிஜ வாழ்க்கையில் எனக்கு இன்னொரு கர்ப்பம் தேவையில்லை, ஒருவேளை திரைப்படத்தில் நடித்தால் தேவைப்படலாம்.. அன்று நான் அணிந்திருந்த அந்த புடவை துணி அப்படி இருந்தது, அவ்வளவுதான்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

1980-களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் காதலில் இருந்த நீனா குப்தா, அந்த காலத்திலேயே திருமணத்திற்கு முன்பே குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் துணிச்சலான முடிவை எடுத்தவர். பலரின் எதிர்ப்பையும் மீறி தனது மகள் மசாபாவை ஒரு ஒற்றைத் தாயாக வளர்த்தெடுத்தார்.

இன்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் மீது தமக்கு எவ்வித வெறுப்பும் இல்லை என்றும், காதலித்த ஒருவரை ஏன் வெறுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்