தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை தமன்னா, தனது திரைப்பயணம் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
21 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் தனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது வாழ்க்கையில் ‘கல்லூரி’ திரைப்படம் மிக முக்கியமானது என குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களது கல்லூரி காலத்தை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தளபதி விஜய் குறித்து பேசுகையில், அவர் மிகவும் எளிமையான மற்றும் மென்மையான மனிதர் என்றும், நடனமாடுவதில் விஜய்யும் ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.
அதேபோல், அஜித் குறித்துப் பேசுகையில், ‘வீரம்’ படப்பிடிப்பின் போது அவர் தனக்காக கையால் இட்லி சமைத்துக் கொடுத்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அஜித் ஒரு சிறந்த சமையல்காரர் மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனிதர் மற்றும் சிறந்த குடும்பஸ்தன் என்றும் தமன்னா புகழ்ந்து பேசியுள்ளார்.
தற்போது ‘புருஷன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தமன்னாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

