2011 மற்றும் 2016 இரண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021ம் வருடம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.. முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் கடந்த 5 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி செய்து முடித்துவிட்டார். தற்போது 2021 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறையும் திமுகவே வெற்றி பெறும் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. அதேநேரம் விஜயின் தவெக இரண்டாம் இடத்தை பிடிக்கும் என சிலர் சொல்கிறார்கள்.. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.. அதிமுகவே இரண்டாம் இடத்தை பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். சில கருத்துக்கணிப்புகள் திமுகவை விட அதிமுக அதிகமான வாக்குகளை பெறும் என சொல்கிறது. இந்நிலையில்தான் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மணி ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது டிடிவி தினகரனுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க சொன்னார்.. ஓபிஎஸ் அதை ஏற்றுக் கொண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு சம்மதிக்கவில்லை.
அப்போது அமித்ஷா கோபத்தில் ‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த முறை திமுக வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து இரண்டு முறை ஸ்டாலின்தான் முதலமைச்சர்’ என சொன்னார். அந்த அறையில் இருந்த துக்ளக் குரு மூர்த்தி அவருக்கு நெருக்கமானவரிடம் அதை கூறினார்.. அவர் என்னிடம் கூறினார்’ என அந்த மணி சொல்லியிருக்கிறார்.

