வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்த படம் உருவான போது கஜினி படத்தைப் போல ஒரு பெரும் பணக்காரராக இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சூர்யாவின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.இந்நிலையில்தான் இந்த படத்தின் டீசர் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த டீசர் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
பெரும் தொழிலபதிராக இருக்கும் சூர்யா 40 வயதை கடந்தவராக இருக்கிறார்.. தொழிலுக்கு நடுவிலும் துப்பாக்கி சூடும் போட்டியில் சூர்யாவுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.. அதில் வெற்றி பெறும் போது அவருக்கு சில பிரச்சனைகளும் வருகிறது. ஒருபக்கம் அவரை விட 20 வயது குறைந்த மமீதா பைஜுவுடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது.
சூர்யாவின் வீட்டிலேயே மமிதா பைஜூ தங்குகிறார்.. ஒருகட்டத்தில் அவர் சூர்யாவை காதலிக்கவும் துவங்குகிறார்.. ஆனால் சூர்யாவுக்கு அதில் விருப்பமில்லை.. உனக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம்.., வேண்டாம் என அறிவுரை சொல்கிறார். ஆனால், மமிதா பைஜூ மாறவில்லை.
டீசரை பார்க்கும்போது விஸ்வநாத் & சன்ஸ் ஒரு கலகலப்பான ஜாலியான திரைப்படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.. அதேநேரம் நிறைய செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என நம்பப்படுகிறது. சூர்யாவுக்கு இந்த படம் கண்டிப்பா ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

