இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல எரிபொருள் நிலையங்களிலும் பொதுமக்களுக்குQR முறையில் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.

சகல எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வரிசை கிரமமாக அமைதியான முறையில் தற்போது எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் தாம் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நேரச்சிலுடன் பெற்றுக் கொண்டதாகவும் தற்போது அரசாங்கத்தின் இந்த QR நடைமுறை திட்டத்தின் மூலம் தமக்கு இலகுவான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது இதனை தாம் வரவேற்பதாகவும் அரசாங்கத்துக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்