உலகம்

இரவிலும் சூரிய வெளிச்சம் வேணுமா? 1 மணி நேரத்திற்கு ரூ.4.6 லட்சம்.. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அறிவிப்பு..!

அமெரிக்காவை சேர்ந்த Reflect Orbital என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், விண்வெளியில் 50,000 பெரிய கண்ணாடிகளை நிலைநிறுத்தி, இரவு நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியை பிரதிபலிக்க திட்டமிட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த இந்த நிறுவனம், முதற்கட்டமாக 60 அடி அகலமுள்ள கண்ணாடியை ஒரு சிறிய செயற்கைக்கோள் மூலம் ஏவ தயாராகி வருகிறது. இது தரையிலிருந்து பார்க்கும்போது ஒரு முழு நிலவின் பிரகாசத்துடன் தோன்றும்.

ஒரு மணிநேர வெளிச்சத்திற்கு சுமார் ரூ.4.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த திட்டம் சூரிய மின்சக்தி பண்ணைகளுக்கு இரவு நேரத்திலும் ஆற்றலை வழங்கவும், அவசர கால தேவைகளுக்கும் உதவும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பென் நோவாக் கூறுகிறார்.

இருப்பினும், இந்த முயற்சி வானியல் ஆய்வுகளை பாதிக்கும் என்றும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தூக்க சுழற்சியை சிதைக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புவிசார் பொறியியல் சார்ந்த இத்திட்டம் காலநிலையை மாற்றியமைக்கும் அபாயம் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த