சினிமா

சாய் சபயங்கருடன் கை கோர்க்கும் மணிரத்னம்?!.. ஏ.ஆர்.ரகுமான் என்னாச்சி

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இயக்குனர் மணிரத்னத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஏ.ஆர்.ரகுமானை ரோஜா படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்தினம். அந்த படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினார் ஏ.ஆர்.ரகுமான். தொடர்ந்து மணிரத்தினம், ஷங்கர் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் துள்ளலான இசையை கொடுத்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் ரகுமான். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் போய் கலக்கினார்.

ரகுமான் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது. ரோஜா படத்திற்கு பின் இதுவரை மணிரத்தினம் இயக்கிய எல்லா படத்திற்கும் ரகுமானே இசையமைத்து வந்தார். இந்நிலையில்தான், மணிரத்தினம் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கவில்லை என்கிறார்கள்.

தற்போது டிரெண்டிங்கில் உள்ள சாய் அபயங்கரிடம் மணிரத்தினம் தரப்பு பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தி உண்மையா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்