தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது திமுகவை விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியலை கொண்டுவர ஆசைப்பட்டார். ஆனால் திமுக அவரை மிரட்டி அது நடக்க விடாமல் தடுத்து விட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ரஜினி யாரை பார்த்து பயப்படுபவர் அல்ல.. ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே அவரைப்பார்த்து சொடக்குப்போட்டு பேசியவர் ரஜினி. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று தைரியமாக சொன்ன ஒரே நடிகர் அவர்தான்.. ஆதவ அர்ஜுனா சொல்வது முழுக்க முழுக்க பொய் என்று ரஜினி ரசிகர்கள் பொங்கினார்கள்.. அதோடு, ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
மேலும் திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்ற பலரும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரஜினியும் இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.. அதில் ‘காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்.. என்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவலை ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்கிறார்’ எனவும் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
விரைவில் இதுபற்றி ஆதவ் அர்ஜுனா விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சால் ரஜினி ரசிகர்களிடன் வாக்குகளை விஜய் இழப்பார் என பலரும் சொல்கிறார்கள்.. ஏற்கனவே ரஜினியை விஜய் ரசிகர் கடுமையாக விமர்சிப்பார்கள்.. அதோடு இதுவும் சேர்ந்து விட்டதால் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகரக்ள் யாரும் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்கிற ஒரு கருத்துவும் பரவி வருகிறது.

