கன்னட திரைப்படமான ‘கேடி: தி டெவில்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்க்கே சுனர்’ பாடல் ஆபாச சர்ச்சையில் சிக்கிய நிலையில், இயக்குனர் பிரேமின் மனைவி ரக்ஷிதா தனது கணவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த பாடலுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் நடிகையான ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “முன்பு வெளியான ‘சோலி கே பீச்சே’,(ஜாக்கெட்டுக்குள்ள என்ன இருக்கு) போன்ற பாடல்கள் தடையின்றி வெளியானபோது, இந்த பாடலை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு பாடலை வைத்து ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த உழைப்பையும் கொச்சைப்படுத்துவது தவறு என்றும், கன்னட திரைப்படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்வது தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவால் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
அர்மான் மாலிக் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட தரப்பினர் இந்த பாடலை கண்டித்ததால், தற்போது அதன் ஹிந்தி பதிப்பு ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்கும் அஞ்சாமல் தங்கள் தரப்பு நியாயத்தை ரக்ஷிதா முன்வைத்துள்ளார் என்றாலும் இன்னும் அந்த பாடலுக்கு விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

