யோகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பாபு. அதனால் யோகி பாபு என அவருக்கு பெயர் வந்தது. தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறார் யோகி பாபு.
ஏனெனில், தற்போது கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிட்டார். வடிவேல் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறுவது இல்லை. சூரியும், சந்தானமும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிறார்கள். எனவே, காமெடிக்கு நடிகர்களே இல்லை என்பதால் பெரும்பாலான படங்களில் யோகி பாபுவே நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான், அவரின் நடிப்பில் வெளியான கிணத்தை காணோம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படம் ரசிகர்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய யோகி பாபு ‘காமெடி படங்களை அதிகம் செய்கிறீர்களே.. கெணத்த காணோம் போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கலாமே என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
கண்டிப்பாக நான் நடிப்பேன்.. நம் மக்களின் பிரச்சினைகளை என் மூலமாக செல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்கள் என்னிடம் வாருங்கள்.. கண்டிப்பாக அந்த கதைகளில் நடிப்பேன்’ என பேசியிருக்கிறார்.

