சினிமா

ஜனநாயகனில் அரசியல் வசனங்கள் கட்!.. சென்சாரில் நடந்தது என்ன?

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்து 9ம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படம் வெளியாகவில்லை.. எனவே, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முதலில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.. ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலே நடக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார். மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் 45 நாட்களுக்கு பிறகுதான் படம் மறுதணிக்கை செய்யப்பட்டது. அப்போது படத்தில் வரும் சில அரசியல் வசனங்களை சென்சார் போர்ட் மியூட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..

குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் இந்த படத்தில் ஒரு காட்சியில் செய்தியாளர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்டு விஜய் பதில் சொல்வது போல காட்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியில் வரும் வசனங்களைத்தான் தணிக்கை வாரியம் மீட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்