சினிமா

Weight loss நல்லது தான்.. அதுக்காக இப்படியா? பாடகியின் பரிதாப நிலை..!

தைவான் நாட்டுப் பாடகி எல்லா சென் ஜியாஹுவா , சீனாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘வேக்யூம் பெல்லி’ எனும் விசித்திரமான உடற்பயிற்சி முறையை செய்து காட்டியது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

44 வயதான அவர், தனது வயிற்று பகுதியை உள்நோக்கி இழுத்து, விலா எலும்புகள் வெளியே தெரியும்படி சுமார் 10 விநாடிகள் நின்றார். இது ஒரு யோகா பயிற்சி முறை என்று அவர் குறிப்பிட்டாலும், அவரது எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது போன்ற அதீத மெலிந்த உடலமைப்பை ஊக்குவிப்பது ஆரோக்கியமற்றது என்றும், அழகு என்பது மெலிந்திருப்பதில் மட்டும் இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாடகியின் உடல் கொழுப்பு அளவு 16.7 சதவீதமாக குறைந்துள்ளதும், அவர் பின்பற்றும் கடுமையான எடை குறைப்பு முறைகளும் ஆபத்தானவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முறையான பயிற்சியாளர் இன்றி இதுபோன்ற கடினமான பயிற்சிகளை வீட்டில் முயல வேண்டாம் என்றும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்வியலே உண்மையான அழகு என்றும் சமூக வலைதளவாசிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்