உலகம்

4 ஆயிரம் கி.மீ தூரத்திலிருந்து ஏவுகணை வீசிய ஈரான்!.. மிரண்டு போன அமெரிக்கா!

கடந்த மாதம் 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி இந்த போர் தொடங்கியது. 20 நாட்களுக்கு மேலாகியும் போர் நிற்கவில்லை. ஒருபக்கம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்களுக்கு இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், பக்ரைன், அபுதாபி போன்ற நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியும் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது..

உண்மையில் ஈரான் இப்படி திருப்பி தாக்கும் என்ன நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில்தான்

இந்திய பெருங்கடலில் அமெரிக்கா – பிரிட்டன் கூட்டு கடற்கரை தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை வீசியது அமெரிக்காவை அலற விட்டிருக்கிறது..

அதிகபட்சம் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் இருக்கும் என அமெரிக்கா நினைத்த நிலையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவுகணை வீசியது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் அலற வைத்திருக்கிறது.

ஈரான் 2 ஏவுகணை வீசியது. அதில் ஒரு ஏவுகணை இலைக்கை எட்டாமல் பாதியிலேயே கீழே விழுந்தது. மற்றொரு ஏவுகணையை அமெரிக்கப்படை சுட்டு வீழ்த்திவிட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த