உலகம்

ஈரான் நாட்டை 5 நாளைக்கு தாக்கமாட்டோம்!. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு…

கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று சொல்லி இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடந்த முதல் நாளிலேயே ஈரான் உச்ச அதிபர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகளுக்கு தங்கள் நாடுகளில் இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி போன்ற நாடுகளின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக பல எண்ணெய் கிணறுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் ஈரான் தாக்குதலில் நடத்தி இருக்கிறது. ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ஹோர்மூச் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி உள் கட்டமைப்புகள் மீது 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்தப் போகிறோம்.. ஈரானுடன் கடந்த சில நாட்களாக திருப்திகரமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும்’ என தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த