மத்திய கிழக்கு போரில் திடீர் திருப்பமாக, ஈரான் தங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்துடன் தொடர்புடைய இந்த பரிசு, பல கோடி டாலர் மதிப்புடையது என்றும், இது அணுசக்தி சார்ந்தது அல்ல, எரிசக்தி சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் முடங்கிக்கிடக்கும் இந்த கடல்வழி பாதையைத் திறப்பது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, அங்கு புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாகவும், விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

