விளையாட்டு

ஐபிஎல் தொடங்க இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது.. திடீரென மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் அணி..!

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மாபெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்க தொழிலதிபர் கல் சோமணி தலைமையிலான கூட்டமைப்பு, இந்த அணியின் 100 சதவீத பங்குகளை சுமார் 15,286 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த புதிய உரிமையாளர் மாற்றம் ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு அணி விற்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம், காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனுக்குப் பதிலாக, இலங்கையின் டி20 கேப்டன் தசுன் ஷனகாவை 2 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுசேர்க்கும் ஷனகாவின் வருகை அணியின் சமநிலையைப் பராமரிக்க உதவும் என்று கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்