சினிமா

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!

தென் மாவட்டங்களில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தனது திரைப்படங்களில் பேசி வருபவர் மாரி செல்வராஜ். இவர் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய எல்லா படங்களுமே விவாதங்களை கிளப்பியது.

சாதிய ஆதரவாளர்கள் இவரை சாதிய படம் எடுக்கிறார் என சொல்கிறார்கள்.. ஆனால் மாரி செல்வராஜோ நான் சாதிக்கு எதிரான படங்களை எடுக்கிறேன் என சொல்கிறார். இந்நிலையில், மாரி செல்வராஜ் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி என சொல்லப்படுகிறது.

முதன்முதலாக ஒரு அதிகமான பட்ஜெட் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். குறிப்பாக வழக்கமாக மாரி செல்வராஜ் படத்தில் இருக்கும் சாதி தொடர்பான கதையும், காட்சிகளும் இந்த படத்தில் இருக்காது.. இது முழுக்க முழுக்க புதுமையான கதையை கொண்ட ஒரு சரித்திர திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்