ஈரான் நாட்டை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவது கடந்த 25 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. அவ்வப்போது இஸ்ரேல் நாட்டிலும் ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்த போர் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக சமையல் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் போர் நின்ற பாடில்லை. இந்த போரை பொறுத்தவரை இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. போர் நிறுத்தப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில் ஏவுகணைகளில் ‘இந்திய மக்களுக்கு நன்றி’ என வாசகங்களை எழுதி அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தனது 83வது ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது.
ஈரானுடன் துணை நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டு மக்களுக்கும் நன்றி என தெரிவித்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

