உலகம்

என்னோட அடுத்த இலக்கு கியூபா!.. அடங்காத டொன்ல்ட் டிரம்ப்!.. சரவதேச அரசியலில் பரபரப்பு

டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றாரோ அப்போது முதலே பல அதிரையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரியை அதிகளவு உயர்த்தினார்.. அமெரிக்க உச்சநீதிமன்றம் தலையில் கொட்டியதால் வரியை குறைத்தார்.

அதன்பின் மீண்டும் உயர்த்தினார். இப்படி வரியை குறைத்து, உயர்த்தி விளையாடி வருகிறார். ஒருபக்கம் இந்திய ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றார்.. அதன் பின் ஈரான் நாட்டுடன் போர் ஏற்பட்டு கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்னெய் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

வெனிசுலா அதிபரை கைது செய்து சிறையில் அடைத்தார். கிரீன்லாந்து நாடு எங்களுக்குதான் சொந்தம்.. அந்த நாட்டை விலைக்கு வாங்குவோம் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது கியூபா நாட்டு குறி வைத்திருக்கிறார். எங்களின் அடுத்த இலக்கு கியூபா என ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், மியாமியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் ‘வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும்.. கடும் பொருளாதார நெருக்கடிகளில் உள்ள கியூபா அரசு விரைவில் வீழும்.. கியூபாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. தேவைப்பட்டால் அமெரிக்கா தலையிடும்’ என பேசியிருக்கிறார்.

இப்படி டொனால் டிரம்ப் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த