சினிமா

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!

இயக்குனர் அமீர் நடித்து வெளியான யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. இந்த படத்திற்கு பின் யோகிபாபு என அழைக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். வடிவேலு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. சந்தானமும், சூரியும் ஹீரோவாக நடிக்கப்போய்விட்டார்கள். எனவே, அந்த வெற்றிடத்தை பிடித்தார் யோகிபாபு.

யோகிபாபுவின் காமெடிகள் பெரிதாக சிரிப்பை வரவழைப்பதில்லை என்றாலும் அவரை விட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பதால் பல படங்களிலும் யோகி பாபுவே காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதேநேரம் 300 படங்களில் நடித்துவிட்டாலும் நினைவு வைத்துக்கொள்வது போல கோமாளி, டாக்டர், மண்டேலா போன்ற சில படங்கள் மட்டுமே அமைந்தது.

இதை புரிந்துகொண்ட யோகிபாபு அவரே பெரிய இயக்குனர்களிடம் போன் போட்டு வாய்ப்பு கேட்கிறாராம். அந்தவகையில், வெற்றிமாறனை தொடர்பு கொண்டு ‘சார் அரசன் படத்தில் நான் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என சொல்ல அவரும் யோகிபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்