இந்தியா

விஜய்க்கு மொத்தம் 10 வீடு!.. தனது பெயரில் மட்டுமே சொத்துக்கள்!.. வேட்புமனுவில் தகவல்!

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், அவரின் சொத்து விபரங்கள் மற்றும் வருமானம் பற்றிய விபரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி விஜய்க்கு 404.58 கோடி அசையும் சொத்து இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.220 கோடி என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் விஜய்க்கு நீலங்கரையில் ஒரு வீடு, ஊருரில் ஒரு வீடு, மயிலாப்பூரில் ஒரு வீடு, பள்ளிப்பட்டில் ஒரு வீடு, படூரில் ஒரு வீடு, கொரட்டூரில் 1 வீடு, சாலிகிராமத்தில் 2 வீடு, சோழிங்கநல்லூரில் 2 வீடு என மொத்தம் 10 வீடுகள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், கடந்த 5 நிதியாண்டுகளில் விஜயின் மொத்த வருமானம் 734 கோடி ரூபாய் எனவும், அதிகபட்சமாக 2021-22 நிதி ஆண்டில் 237 கோடி ரூபாய் வருமான் வரி கணக்கு தாக்குதல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இதுபோக சினிமா மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் அதிபராகவும் விஜய் இருந்திருக்கிறார். ஜெயா நகர் ப்ராபர்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ளதாகவும் வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் திருமணமாகி 25 ஆண்டுகளில் மனைவி, மகன், மகள் பெயர்களில் ஒரு சொத்தை கூட வாங்கவில்லை. எல்லா சொத்துக்களையும் தனது பெயரில் மட்டுமே அவர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்