சினிமா

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

பாலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் சல்மான் கான். ஆனால் கடந்த பல வருடங்களாகவே இவருக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை.. அவரும் பல இயக்குனர்களின் படங்களில் நடித்து பார்த்தார்.. ஆனால் படங்கள் ஓடவில்லை. அதற்கு முக்கிய காரணம் சல்மான்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதால்.. வெளிப்புற படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வதில்லை. முழு ஷூட்டிங்கும் செட்டில் மட்டுமே நடக்கிறது.. அதோடு, இரவில் மட்டுமே அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாலும்தான் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து கடந்த வருடம் வெளியான சிக்கந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது. சல்மான்கான் இரவு நேரத்தில் மட்டுமே ஷூட்டிங் வந்தார்.. எனவே படத்தை நினைத்தபடி எடுக்க முடியவில்லை என புகார் சொன்னார் முருகதாஸ். இதையடுத்து பராசக்தி படம் ஓடாத போது ‘முருகதாஸ் காலை 6:00 மணிக்கே ஷாட் வைத்தார்.. ஆனால் படம் ஓடவில்லை’ என நக்கலடித்தார் சல்மான்கான்..

இந்நிலையில்தன், சல்மான் கான் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தை விஜயை வைத்து வாரிசு படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தோழா உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை வாரிசு படத்தை தயாரித்து தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில்தான் இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.. இந்த படத்தின் ஷுட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்த நயன்தாரா இப்போது சல்மான்கானுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்