சினிமா

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் முதல் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் குறித்த முழுமையான தகவல் இதோ.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் ‘ஹாப்பி ராஜ்’. அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ள இப்படம், முதல் நாளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், தற்போது மவுத் டாக் மூலமாக குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தந்தை மகன் இடையேயான செண்டிமெண்ட் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சாக்லேட் பாய் அப்பாஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் மீதான பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இப்படத்திற்கு ஆடியன்ஸ் வருகை எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம் அதன் 3-வது நாளில் மட்டும் ரூ. 1.05 கோடியை நிகர வசூலாக ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் அசத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்