ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள அஜ்பான் பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதறல்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்றும், அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 7 பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் ஆயுத போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
ஏவுகணை சிதறல்கள் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த காயங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
அபுதாபி வான் பாதுகாப்பு அமைப்பு இந்த அச்சுறுத்தலை வெற்றிகரமாக தடுத்தாலும், அதன் சிதறல்கள் தரைப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

