தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் கட்டி வருகின்றன. குறிப்பாக பிரச்சாரம் செய்வது, வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது என களம் சூடு பிடித்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடந்து சில நாட்களாக இழுபுறி நீடித்து வந்தது.. எனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்தான் தற்போது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் இன்று இரவுக்குள் காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேட்பாளர்கள் பின்வருமாறு:
ஸ்ரீபெரும்புதூர் (தனி) – செல்வப்பெருந்தகை
சோளிங்கர் – முனிரத்னம்
உதகை – ராமச்சந்திரன்
விளவங்காடு – பிரவீன்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
ஊத்தங்கரை – குப்புசாமி
கவுண்டம்பாளையம் – சூர்யபிரகாஷ்
சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு
துறையூர் – வீச்சு லெனின் பிரசாத்
கடலூர் – சந்திரசேகரன்
மயிலாடுதுறை – ஜமால் யூனுஷ் முகமது
பொன்னேரி(தனி) – துரைசந்திரசேகர்
ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன் கோவில் – சங்கை கணேசன்
அம்பா சமுத்திரம் – துரை
நாங்கு நேரி – ரூபி மனோகரன்
குளச்சல் – தாரகை கத்பட்
அறந்தாங்கி – டி.ராமச்சந்திரன்
ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்
திருவாடனை – ராம.கரு மாணிக்கம்
காரைக்குடி – மாங்குடி
சிவகாசி – கணேசன் அசோகன்
வேளச்சேரி – ஹசன் மவுலானா
பென்னாகரம் – தமிழ்க்குமரன்
கிருஷ்ணகிரி – செல்லக்குமார்
ஆத்தூர்(தனி) – அர்த்தநாரி

