தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, 2031-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படும்.
2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிகள் மட்டுமின்றி, கலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவையும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி சிந்தனை சார்ந்த பாடங்கள் 2029- முதல் பொதுத்தேர்வில் இடம்பெறும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ப ‘அட்வான்ஸ்டு’ முறையை தேர்வு செய்யும் வசதியும் அறிமுகமாகிறது. இந்த மாற்றங்கள் மாணவர்களின் பன்மொழித் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.
சிபிஎஸ்இ-யின் இந்த புதிய பாடத்திட்ட வரைவு 2031-க்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.

