சினிமா

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், தனுஷுடன் இவருக்கு பழக்கம் இருந்ததால் அவரின் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். அதோடு, நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படம் உருவானபோது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொமான்ஸ் செய்தனர். இதனால், சரியாக ஷூட்டிங் நடக்கவில்லை என சொல்லப்பட்டது. அதோடு, சொன்னதை விட அதிக செலவு ஆனதால் கோபப்பட்ட தனுஷ் இதற்கு மேல் நான் செலவு பண்ண முடியாது என கைவிரித்துவிட்டார். எனவே, விக்னேஷ் சிவனுக்காக நயன்தாராவே மீது பணத்தை கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார்.

அந்த படம் ஹிட் அடித்தும் விக்னேஷ் சிவனையோ, நயன்தாராயோ ஆகியோரை சந்திப்பதையே தனுஷ் நிறுத்திவிட்டார். மேலும், விக்கி – நயன் திருமணம் நடந்தபோது அது தொடர்பான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து அதை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதில், நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் அடக்கம். ஆனால், இதற்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். இது நயனுக்கும், விக்கிக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்தபேட்டியில் ‘வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது தனுஷ் சாரிடன் இரண்டரை வருடங்கள் கூடவே இருந்தேன். அவருடன்தான் சாப்பிடுவேன். என் அப்பா இறந்தநாளில்தான் தனுஷின் பிறந்தநாள். எனவே, அவரை என் அப்பாவாகவே நான் பார்த்தேன். அப்படி ஒரு அன்பு.. ஆனால், சூழ்நிலை எங்களை பிரித்துவிட்டது. அவருடான உறவு முறிந்துபோனதை பெரிய இழப்பாக பார்க்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்