இந்திய மற்றும் ஜப்பானிய கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், ஜப்பான் அரசு ‘லோட்டஸ் திட்டம் 2026’ என்ற புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 1,000 முதுகலை மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பிஎச்டி முடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஜப்பானில் தங்கி ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது ‘லோட்டஸ் பேசிக்’ மற்றும் ‘லோட்டஸ் ஆஸ்பயர்’ என இரு பிரிவுகளாக செயல்படும்.
தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் சுமார் 1.4 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ‘ஆஸ்பயர்’ பிரிவின் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக 25.6 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
செயற்கை நுண்ணறிவு, பயோ டெக்னாலஜி, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் ஜப்பானிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 9 ஆகும்.
இந்திய இளைய தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதலை பெற இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

