விளையாட்டு

மேட்ச் பார்க்கிற ஆசையே போயிருச்சு.. மீண்டும் மீண்டும் தோற்கும் சிஎஸ்கே..!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல் 50 ரன்களும், ரஜத் படிதார் 48 ரன்களும் சேர்த்தனர்.

251 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சர்பராஸ் கான் மட்டும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஜேமி ஓவர்டன் 37 ரன்கள், பிரசாந்த் வீர் ரன்கள் என எடுத்து போராடிய போதிலும், ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்ட நாயகனாக டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்