உலகம்

லெபனான் குடியிருப்பு பகுதியை தாக்கிய இஸ்ரேல்!.. வீடுகள் தரைமட்டம்!. பலரும் பலி!

ஒருபக்கம் ஈரான் நாட்டை தாக்கி வந்தாலும் ஒரு பக்கம் லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் கடந்த பல நாட்களாகவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது.

லெபனான் நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினை குறிவைத்து இஸ்ரேலில் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள 140க்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புகளை அழித்துவிட்டோம்.. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிர பயிற்சி மையங்கள், ஆயுதங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாகிவிட்டோம் என்று இஸ்ரேல் ஏற்கனவே சொன்னது.

இந்நிலையில்தான், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரக்கால மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் பலரும் உயிரினங்களுக்கு உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த