தமிழகத்தில் பல கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோரின் அதிபர் சரவணன். துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார். அது மக்களிடம் பிரபலமாகவே சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்தது. அதேநேரம், அவருடன் நடிக்க தமன்னா, ஹன்சிகா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் முன்வரவில்லை. எனவே, மும்பையிலிருந்து ஒரு நடிகையை கொண்டு வந்தார். விளம்பர படங்களை இயக்கிய ஜோடி-ஜோடி இயக்கத்தில் லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்தார் சரவணா. ஆனால், அந்த படத்தில் அவரின் நடிப்பும், தோற்றமும் ட்ரோல் செய்யப்பட்டது.
எனவே தனது அடுத்த படத்தில் இந்த தவறுகள் எல்லாம் இருக்கக்கூடாது என முடிவு செய்தார் லெஜன்ட் சரவணா. எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, கருடன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த துரை செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்து லீடர் என்கிற படத்தை உருவாக்கினார்.
இந்த படத்தில் சரவணாவின் தோற்றமும், உடல் மொழியும் அவர் நடித்த விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது.. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.. அதோடு படமும் பக்கா ஆக்சன் காட்சிகளோடு உருவாக்கப்பட்டிருந்ததால் படம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் 3.7 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை 75 லட்சம்ம் இரண்டாம் நாள் 1.08 கோடி, மூன்றாம் நாளான நேற்று 1.22 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது.

