உலகம்

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்தை தாண்டியும் முடிவுக்கு வரவில்லை. ஒருபக்கம் ஈரானும் திருப்பித் தாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க ராணுவத்தளங்களுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகளை குறிவைத்து அந்நாடுகளின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஒருபக்கம் இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியிருக்கிறது.. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. இதனால் எரிபொருள் தயாரிக்க முடியாமல் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவை விலை உயர்ந்துள்ளது. அதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது.

10 நாட்களுக்கு முன்பு ஈரானுக்கு கெடு விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘10 நாட்களுக்குள் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.. குறிப்பாக நாட்டில் ஈரானில் உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்’ எனக்கூறியிருந்தார்.. ஆனால் ஈரான் பணியவில்லை.

எங்கள் மீது நீங்கள் தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு நரகத்தின் வாசலை காட்டுவோம் என ஈரான் திருப்பி சொன்னது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ‘ஒட்டுமொத்த ஈரானையும் ஒரே நாளில் எங்களால் அழிக்க முடியும். அது செவ்வாய்க்கிழமை(இன்று) கூட நடக்கலாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் கண்டுகொள்ளாத நிலையில் கோபமடைந்த டிரம்ப் ‘ஈரானை முழுமையாக அளிக்க போகிறோம்.. அந்நாடு மீண்டும் ஒருபோதும் உயிர் பெறாது.. எனக்கு விருப்பமில்லை என்றாலும் இது நடந்தே தீரும்.. இன்று இரவு வரலாற்றில் மிக முக்கியமானது.. 45 ஆண்டு கால மிரட்டல், ஊழல், மரணம் முடிவுக்கு வரும்.. ஈரான் மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்’ என தனது சமூக வலைதள பக்கங்களில் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து செவ்வாய்க்கிழமையான இன்று இரவு ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த