சினிமா

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அம்மா நடிகை என்பதால் சிறுவயதிலேயே இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.. ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.. அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. எனவே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அதேபோல் பாலிவுட் வாய்ப்புகளுக்காக மட்டுமே காத்திருக்காமல் கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடித்த நிலையில் தற்போது ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜான்வி கபூர் ‘நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று சென்றேன்.. அப்போது சில மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய புகைப்படமும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனக்கு 15 வயது இருக்கும் போது எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து பதிவேற்றம் செய்திருந்தனர். தற்போது ஏஐ தொழில்நுட்பத்துடன் எனது உருவத்தை ஆபாசமாக உருவாகி மோசமாக சித்தரிக்கிறார்கள்.. இதை பார்க்கும் பலரும் அது உண்மை என நம்புகிறது.

பணம் மற்றும் வியூஸ்க்காக ஒரு பெண்ணின் உடலை அவரின் சம்மதம் இன்றி இப்படி பொய்யாக சித்தரிப்பது மிகவும் மோசமான செயல். இப்போது இதை தடுப்பதற்கு என்னிடம் அதிகாரம் இல்லை என்றாலும் என்னை பற்றிய விமர்சனங்களுக்கு பயந்து அமைதியாக இருக்கிறேன்.. எதிர்காலத்தில் கண்டிப்பாக நிச்சயம் குரல் கொடுப்பேன்’ என பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்