இந்தியா

வேலை இழந்த பின்னரும் நிம்மதியாக இருக்கிறேன், காரணம் சொந்த வீடு வாங்கவில்லை.. இளைஞரின் வைரல் பதிவு.!

பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகும் தான் நிம்மதியாக இருப்பதாக பகிர்ந்த பதிவு இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பொதுவாக வேலை இழந்தால் ஏற்படும் பதற்றம் தமக்கு இல்லையெனவும், அதற்கு முக்கிய காரணம் தான் ‘இஎம்ஐ’ முறையில் வீடு வாங்காததே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்க திட்டமிட்டிருந்த அவர், தொழில்நுட்ப துறையில் நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிட்டுள்ளார். மாறாக, தனது வருமானத்தின் பெரும் பகுதியை சரியான இடங்களில் முதலீடு செய்துள்ளார்.

“கையில் வேறு வேலை இல்லை என்றாலும், மாதந்தோறும் கட்ட வேண்டிய வீட்டு தவணை இல்லாதது எனக்கு பெரும் நிம்மதியைத் தருகிறது,” என அவர் கூறியுள்ளார். இந்த பதிவு, இளைஞர்கள் மத்தியில் வாடகை வீடா அல்லது சொந்த வீடா? என்ற நிதி மேலாண்மை குறித்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இக்கட்டான காலங்களில் கடன் சுமை இல்லாமல் இருப்பது எத்தகைய மன அமைதியை தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்