இந்தியா

1040 கோடி முதல் 88 கோடி வரை சொத்துக்கணக்கு!.. பணக்கார வேட்பாளர்கள் யார் யார்?

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.. இதில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சியும், தவெகவும் தனித்து போட்டியிடுகிறது.

ஒருபக்கம் தேர்தல் வந்து விட்டாலே வேட்புமனு தாக்கல் செய்யும் போது முக்கிய வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து கணக்குகள் விமர்சனத்திற்கு உள்ளாகும்.. அது விவாதங்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பணக்கார வேட்பாளராக இருக்கும் முதல் 5 வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் பற்றி பார்ப்போம்.

இதில் முதலிடத்தில் இருப்பது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியின் மனைவி லீமா ரோஸ். அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் பேட்டியிடும் இவர் தனக்கு 1040 கோடி சொத்து இருப்பதாக கணக்கில் காட்டியிருக்கிறார். அவருக்கு அடுத்து நடிகர் விஜய் 600 கோடி சொத்து மதிப்பு காட்டியிருக்கிறார்.

அவருக்கு அடுத்து திமுக சார்பில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் மோகன் 209 கோடி கணக்கு காட்டி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அடுத்து லீமா ரோஸின் மருமகனும், வில்லிவாக்கத்தின் தவெக வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா 198 கோடி கணக்கு காட்டி நான்காம் இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தாஸ் இருக்கிறார். இவர் தனக்கு 88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்