சினிமா

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் ஓடவில்லை, அதன்பின் நடிகர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பு கொண்டதால் இந்த படம் டேக்ஆப் ஆனது. கதாநாயகியை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருந்தாலும் விஜய் சேதுபதிக்கு நயன்தாராக்கு இணையான கதாபாத்திரம் அமைந்தது..

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.. இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.. அதேநேரம் இந்த படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமையவில்லை.. தற்போது பிரதீப் ரங்காதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான் படபிடிப்புக்காக கையில் 250 ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றேன்.. அனிருத்திடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.. நான் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது உங்களுடைய பையில் ஐம்பதாயிரம் பணம் வைத்திருக்கிறேன் என அனிருத் மெசேஜ் செய்தார். அன்று நான் அழுததில் பேருந்து ஜன்னல் கம்பிகள் கண்ணீரால் நனைந்து போனது.. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.. அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு’ என்று ஃபிலிங்காக பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்