கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஹாஸ்கெல் இலவச நூலகம் மற்றும் ஓபரா ஹவுஸ் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகக் கருதப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத்தையும் கனடாவின் கியூபெக் மாகாணத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நூலகத்தின் தரைப்பகுதியில் வரையப்பட்டுள்ள கறுப்பு நிறக் கோடு இரு நாடுகளையும் பிரிக்கிறது. நூலகத்திற்குள் வரும் வாசகர்கள் ஒரு நாட்டில் அமர்ந்து கொண்டு மற்றொரு நாட்டில் உள்ள புத்தகத்தை எடுக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், பொதுமக்கள் இங்கு நுழைய விசா போன்ற ஆவணங்கள் தேவையில்லை. எனினும், எல்லை விதிகளை மீறாமல் இருக்க நுழைவாயில் அமெரிக்கப் பகுதியில் மட்டுமே உள்ளது. நூலகத்தின் ஓபரா ஹவுஸ் பகுதியில் மேடை ஒரு நாட்டிலும், பார்வையாளர் அமரும் பகுதி மற்றொரு நாட்டிலும் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இரு நாட்டு மக்களையும் அறிவால் இணைக்கும் பாலமாக இந்த நூலகம் இன்றுவரை திகழ்ந்து வருகிறது.
கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளை பிரிக்கும் ஒரே ஒரு நூலகம்

