தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. ஒரு கட்டத்தில் நடிகராக மாறி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.. அதில் பல திரைப்படங்கள் வெற்றியும் பெற்றிருக்கிறது.. தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
ஒருபக்கம் அரசியலிலும் களம் இறங்கி இருக்கிறார் சுந்தர்.சி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டியிகிறார். எனவே, கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் சுந்தர்.சி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. அதோடு அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பழனிவேல் தியாகராஜனை சுந்தர்.சி விமர்சித்து பெசி வருகிறார்.
இந்த தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அவர் வெற்றி பெற்ற இந்த பி.டி.ஆர் இந்த தொகுதி மக்களுக்கு அவர் எந்த நல்லதும் செய்யவில்லை என்றெல்லாம் பேசி வருகிறார். இந்நிலையில்,
கலகலப்பு 3 படத்திற்கு வாங்கிய முன் பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டி வருவதாக சுந்தர்.சி மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
குறித்து நேரத்தில் ஷூட்டிங்கை தொடங்காமல் சம்பளத்தை 5 கோடியிலிருந்து 10 கோடியாக உயர்த்துமாறு சுந்தர் சி கூறியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை கொடுத்திருக்கிறார். இதையடுத்து ‘சுந்தர்.சி-க்கு வாழ்த்துக்கள்.. எதிர்க்கட்சி உங்களை பார்த்து பயப்பட துவங்கியிருக்கிறது’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

