திரையுலகில் கதாநாயகிகள் பலர் திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருந்து வருகின்றனர். பல நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மலையாள திரை உலகிலும் சில நடிகைகள் இன்னும் திருமண பந்தத்தில் இணையவில்லை.
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் மாளவிகா திருமணமா? பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார்.
இதேபோன்று 30 வயதை தொட்ட சம்யுக்தா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நடிகைகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
பார்வதி திருவோத்து
விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தின் கதாநாயகியான பார்வதி திருவோத்து 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மடோனா செபாஸ்டியன்
நடிகை மடோனாவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர் திருமண பந்தத்தில் இணையவில்லை.
ஐஸ்வர்யா லட்சுமி
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 34 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஹனி ரோஸ்
34 வயதான ஹனி ரோஸ் ரேச்சல் படத்தை தவிர அவரிடம் வேறு எந்த படமும் இல்லை. ஆனாலும் இன்னும் கல்யாணமா? பார்ப்போம் என்கிறார்.

