வடமேற்கு ஒன்டாரியோவில் உள்ள ஒரு ஏரியில் மோட்டார் படகிலிருந்து மான் வேட்டையாடிய இரண்டு அமெரிக்கர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அமெரிக்கர்களுக்கும் ஒட்டுமொத்தமாக 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டேனியன் செவாலியர் மற்றும் மைக்கேல் கல்டோ ஆகிய இருவருமே இவ்வாறு இவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2023 அக்டோபரில் இடம்பெற்றுள்ளது. மேலும் இருவருக்கும் 2 ஆண்டுகள் ஒன்டாரியோவில் வேட்டை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
இருவரும் மோட்டார் படகில் இருந்த போது ஒரு மானை நோக்கிச் சுட்டதாக வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

