சினிமா

ரஜினிகாந்த் தனுஷ் கதையை நிராகரித்தாரா?

இம்மாத தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார். சுந்தர் சி விலகலுக்கு அவர் சொன்ன கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வேறு இயக்குனர்களிடம் தற்போது கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அந்த இயக்குனர்கள் பட்டியலில் தனுஷும் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே தனுஷ், ரஜினியை இயக்க ஒரு கதையை சொல்லி இருந்ததாகவும் ஆனால் அப்போது அது நடக்கவில்லை என்பதால் இப்போது அந்த கதையை திரும்ப கேட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அந்த கதையில் தற்போது ரஜினி திருப்தி அடையவில்லை என்பதால் நிராகரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்னக் கதையை டிக் அடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்