தற்போது இந்தி திரையுலகில் மிகவும் போற்றத்தக்க ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு முன்பே அபிஷேக் பச்சன் கரீஷ்மா கபூரைத்தான் திருமணம் செய்ய இருந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. அந்த நேரத்தில் அமிதாப் பச்சனுக்கு தன்னுடைய கம்பெனியால் பெரும் நஷ்டம் ஏற்பட பெரிய கடனாளியாக மாறினார்.
அப்போது கரீஷ்மா கபூரின் தாய் அமிதாப் பச்சன் குடும்பத்திடம் ஒரு அக்ரிமெண்ட் கேட்டார். அதாவது எக்காரணம் கொண்டும் உங்களுக்கு பணப் பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால் தன் மகளின் பணத்தில் கை வைக்கக் கூடாது என்றும் அபிஷேக் பச்சனுக்கு உங்கள் சொத்தில் பாதியை எழுதி தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இது ஜெயாபச்சனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்த உடனே இந்த பெண் வேண்டாம் என கரீஷ்மா கபூரை நிராகரித்தாராம் ஜெயா பச்சன்.
அடுத்து அபிஷேக் பச்சனுக்கு ஐஸ்வர்யா ராயுடன் திருமணம் நடக்க , கரீஷ்மா கபூருக்கு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து வைத்தாராம் கரீஷ்மா கபூரின் தாய். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் 3000 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டே கரீஷ்மா கபூரை அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் அவரது தாய். நினைத்ததை போல கரீஷ்மா கபூருக்கும் அந்த தொழிலதிபருக்கும் திருமணம் நடக்க ஹனிமூனுக்கு தன் நண்பர்களை அழைத்து சென்றிருக்கிறார் கரீஷ்மா கபூரின் கணவரான சஞ்சய் கபூர்.
அன்று முதலிரவில் அவர்கள் அறையில் சஞ்சய் கபூரும் அவருடைய ஆண் நண்பர்களும் இருக்க அவர்கள் முன்னிலையில் கரீஷ்மா கபூரை நடனமாட சொன்னாராம். இது கரீஷ்மா கபூருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை தன் வீட்டில் சொல்லவே இல்லையாம் கரீஷ்மா கபூர். இன்னொரு பக்கம் பிரஸ்டீஜும் பார்த்திருக்கிறார். ஏனெனில் அபிஷேக் பச்சனை பணத்துக்காக வேண்டாம் என சொன்னது. அவர்கள் முன்னிலையில் தனக்கு இப்படி ஒரு பிரச்சினை என்றால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்பதால் இதை வெளியில் சொல்லவே இல்லையாம்.
இப்படியே ஆண்டுகள் போக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார் கரீஷ்மா கபூர். தன் குழந்தைகள் வளரும் வரை பொறுத்துப் போக ஒரு கட்டத்திற்கு பிறகு சூழ் நிலையை சமாளிக்க முடியாமல் தன் வீட்டிற்கே வந்துவிட்டாராம் கரீஷ்மா கபூர். தன் தங்கை கரீனா கபூரிடம் நடந்ததை சொல்ல அதன் பிறகு விவாகரத்து வாங்கி இப்போது தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கரீஷ்மா கபூர். அவருடைய கணவர் சஞ்சய் கபூர் மறுபடியும் திருமணம் செய்ய டென்னிஸ் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாராம். இப்படி நடிகைகளின் வாழ்க்கை ஓஹோனு இருக்கும் என வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கரீஷ்மா கபூரின் வாழ்க்கை ஒரு பாடம் என இந்த தகவலை பிரபல நடிகையும் இயக்குனருமான குட்டி பத்மினி கூறினார்.

