கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாடல் “மீசால பில்லா” அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான
“சசிரேகா” தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரோலியொ மற்றும் மது பிரியா ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

